யாழ் மாநகர சபையில் பதவி வெற்றிடங்கள்
யாழ் மாநகர சபையில் பதவி வெற்றிடங்கள்
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் தகைமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சுகாதார தொழிலாளி, வேலைத்தொழிலாளி, நகர மண்டப பாதுகாவலர், நூலக உதவியாளர், மேசன், திருத்துனர், இயந்திர இயக்குநர், தச்சுத்தொழிலாளி,சாரதி ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தாரி இலங்கைப் பிரஜையாகவும் மற்றும் யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் இறுதித்திகதி 19.11.2013 அன்று 18 வயதிற்கு குறையாதவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் அவசியம்.
கல்வித்தகைமையாக க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் இரு திறமைச்சித்திகள் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
தகுதியானவர்கள் யாழ். மாநகர சபையுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விபரங்களை அறியலாம்.
யாழ் மாநகர சபையில் பதவி வெற்றிடங்கள்
Reviewed by The King
on
7:05 AM
Rating:
No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .