Propellerads

கொழும்பில் கடத்தப்பட்ட 3 பிள்ளைகளின் தாய் ஹட்டனில் மீட்பு. [படங்கள் இணைப்பு.

கொழும்பில் கடத்தப்பட்ட 3 பிள்ளைகளின் தாய் ஹட்டனில் மீட்பு. [படங்கள் இணைப்பு.







கொழும்பு – தெமட்டகொட, பேஸ் லைன் வீதியில் வசிக்கும் 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு ஹட்டன் வில்பிரட் பிரதேசத்தில் தேயிலை காட்டுப்பகுதியில் கட்டி வைத்த இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


பாத்திமா நிலுபா உசைன் என்ற பெண் இவ்வாறு நேற்று (18) மாலை 4 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து முகத்தை மறைத்து கைகளை கட்டியதாகவும் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்படி பெண் கட்டிய கயிறை கழற்றி குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதன்படி மேற்படி வீட்டில் இருந்த உரிமையாளர் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து சம்பவத்தை பற்றி தெரிவித்த பின் ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்தார்.

பெண்ணின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதனால் அப்பெண்ணை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் ஹட்டன் பகுதிக்கு வந்ததில்லையென இப்பெண் தெரிவித்ததாகவும், இவர் கொடுத்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணைக்கு பெண்ணின் கணவரை ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதரவேண்டும் என தெரிவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸர் குறிப்பிட்டனர்.
கொழும்பில் கடத்தப்பட்ட 3 பிள்ளைகளின் தாய் ஹட்டனில் மீட்பு. [படங்கள் இணைப்பு. Reviewed by The King on 9:01 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.