யாழ். பூநாறி மரத்தடியில் இரு இளைஞர்கள் மீது வாள் மற்றும் கை கோடரியினால் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்
யாழ். பூநாறி மரத்தடியில் இரு இளைஞர்கள் மீது வாள் மற்றும் கை கோடரியினால் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்
யாழ். பூநாறி மரத்தடியில் இரு இளைஞர்கள் மீது வாள் மற்றும் கை கோடரியினால் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற் கொண்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை வீதியில் உள்ள பூநாறி மர பிரதேசத்தில் இன்று (20) மாலை 6.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கொக்குவில் பிரதேசத்தை சேர்ந்த திலீப் (வயது 26) செந்தீஷன் (வயது 24) என்னும் இரு இளைஞர்களே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கொக்குவில் மஞ்சவன பகுதியில் இருந்து 6 மோட்டார் சைக்கிளில் வந்த 10 நபர்கள் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த இருவரையும் தாக்க முற்பட்டுள்ளனர்.
அத் தாக்குதலில் இருந்து தப்பி காங்கேசன் துறை வீதியின் ஊடாக முச்சக்கர வண்டியில் ஓடியவர்களை சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு கலைத்து வந்து பூநாறி மரத்தடியில் மீண்டும் இடை மறித்து முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் மீது வாள் மற்றும் கைக்கோடாரிகளால் சரமாரியாக வெட்டியுள்ளார்கள்.
இத்தாக்குதலை மேற்கொண்ட குழுவில் மூவர் கைகோடாரிகளை வைத்திருந்ததாகவும் ஒருவர் வாள் வைத்திருந்ததாகவும் இச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். பூநாறி மரத்தடியில் இரு இளைஞர்கள் மீது வாள் மற்றும் கை கோடரியினால் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்
Reviewed by The King
on
9:42 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .