Propellerads

27வது பிறந்த நாளை விஜய்யுடன் கேக் வெட்டி கொண்டாடிய சமந்தா

27வது பிறந்த நாளை விஜய்யுடன் கேக் வெட்டி கொண்டாடிய சமந்தா

தென்னிந்தியாவில் மிகவும் பிசியான, காஸ்ட்லியான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக கத்தி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் 4 படங்களில் நான்கு பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சென்னையில் நடந்து வரும் கத்தி படப்பிடிப்பில் (ஏப்ரல் 28) தனது 27வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஹீரோ விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சமந்தா கேக் வழங்கினார்.

மாஸ்கோவின் காவிரி என்ற சிறிய படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது, அதன் பிறகு முரளி மகன் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் நடித்தார், அந்தப்படமும் சரியாக போகவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த பிறகு சமந்தாவின் வாழ்க்கையே திசை மாறியது. கடந்த 4 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து உயரத்தில் நிற்கிறார். சித்தார்த்துடன் காதல் என்ற விவகாரம் தவிர்த்து சமந்தா சமத்தான பிள்ளையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
27வது பிறந்த நாளை விஜய்யுடன் கேக் வெட்டி கொண்டாடிய சமந்தா Reviewed by The King on 1:19 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.