விஜய்யின் கத்தி படத்தில் 3 பாட்டு ரெடி!!!
விஜய்யின் கத்தி படத்தில் 3 பாட்டு ரெடி!!!
ஜில்லா படத்தை அடுத்து விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் “கத்தி” எனும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜயக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
“கத்தி” படக்குழுவினர் இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வளசரவாக்கத்தில் நடைபெற்றுவருகிறது. கஷ்டம் யாருக்கு என்று பார்த்தல் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்க்கு தான், விஜய்யின் ரசிகர் கூட்டத்தின் மத்தியில் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஒளிப்பதிவு செய்கிறாராம்.
இப்படத்தின் இசையமைப்பாளர் “கொலைவெறி”புகழ் அனிருத் இவர் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் “கத்தி படத்தில் 3 பாடல்கள் முடித்து விட்டேன். 3 பாடல்களும் நன்றாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.
விஜய்யின் கத்தி படத்தில் 3 பாட்டு ரெடி!!!
Reviewed by The King
on
8:37 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .