நயன்தாராவுக்கு என்ன கேடு வந்துச்சு? : ஆத்திரத்தில் ‘அனாமிகா’ தயாரிப்பாளர்!
நயன்தாராவுக்கு என்ன கேடு வந்துச்சு? : ஆத்திரத்தில் ‘அனாமிகா’ தயாரிப்பாளர்!
ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் ஆஜராகி விடும் முன்னணி நடிகைகள் பலரும் அந்தப் படத்தின் புரமோஷன்களுக்கு வருவதே இல்லை. அதிலும் குறிப்பாக தென்னிந்திய நடிகைகள் மீது இந்தக் குற்றச்சாட்டு அதிகம் உண்டு.
அதில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா தான்.
வாங்குகின்ற சம்பளத்துக்கு படப்பிடிப்பில் தவறாமல் கலந்து கொள்ளும் நயன்தாரா படங்களின் புரமோஷன்களுக்கு மட்டும் கூப்பிட்டால் வருவதே இல்லை. குறிப்பாக தமிழில் அவர் நடித்து வரும் எல்லாப் பட விழாக்களிலும் இதே வேலையைத் தான் தவறாமல் செய்து வருகிறார்.
இப்போது இதே பார்முலாவை தெலுங்கு பட விழாக்களிலும் நயன்தாரா கடைபிடிக்க ஆரம்பித்திருப்பதால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
ஹிந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி’ படம் தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரிலும் தமிழில் நீ ‘எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு டைரக்ட் செய்துள்ளார்.
சமீபத்தில் ‘அனாமிகா’ தெலுங்கு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் பங்ஷன் ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் வழக்கம் போல பழக்க தோஷத்தில் விழாவுக்கு போகாமல் எஸ்கேப் ஆகி விட்டார் நயன்தாரா. இதனால் அவர் மீது தயாரிப்பாளர் செம கடுப்பில் இருக்கிறார்.
இதே படம் ஹிந்தியில் ரிலீசான போது அதில் நடித்த வித்யாபாலன் தவறாமல் எல்லாப் பங்ஷன்களிலும் கலந்து கொண்டார். அவரே வரும் போது இவருக்கு என்னக் கேடு வந்தது என்பது தான் தயாரிப்பாளரின் நியாயமான கேள்வி?
நயன்தாராவுக்கு என்ன கேடு வந்துச்சு? : ஆத்திரத்தில் ‘அனாமிகா’ தயாரிப்பாளர்!
Reviewed by The King
on
8:21 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .