Propellerads

சித்திரப் போட்டியில் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவன்!!!

சித்திரப் போட்டியில் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவன்

மானிப்பாய் இந்தக்கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி பயில்கின்ற மாணவன் சசிதரன் சித்திரப் போட்டியில் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பும் விருதுவழங்களும் அண்மையில் கொழும்பில்பண்டாரநாயக்க சவ்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பல்வகைமையின் சமத்துவத்தின் ஊடாக அலங்கரிக்கப்பட்ட இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான என்ற தொனிப்பபொருளில் அமைந்த மேற்ப்படி சித்திரப்போட்டியிலேயே மேற்ப்படி மாணவன் வெற்றி பெற்றள்ளார்.

சுதுமலையில் வசிக்கின்ற ஆரம்ப கல்வியினை சுதுமலை சத்தியசாயி வித்தியாலயத்திலும் தரம்1-5 வரை சுதுமலை சிம்ய பாரதி வித்தியாலயத்திலும் தரம் 6முதல் மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கல்வி பயன்றுவருகின்றார்.

சிறுவயதில் இருந்தே சித்திரத்துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றறார். சிறுவயதில் தாயாரின் உதவியுடன் சித்திரத்தினை வரையக்கற்றக்கொண்ட இவர் தரம் 6ல் கல்வி பயிலும் போது சசிக்குமார் ஆசிரியரிடம் தற்போது மானிப்பாய் இந்தக்கல்லூரியில் தீபன் ஆசிரியர் மற்றும் தனியார் கல்வி நிலையத்தில் ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆசிரியரிடமும் கற்றதன் மூலம் தனது திறமைகளினை வளர்த்தக்கொண்டார்.

சித்திரத்துறையின் மீது பேரார்வம் உடைய இவர் பல போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களினை பெற்றக்கொண்டதுடன் ஒருவரினை பார்த்து அப்படியே வரைவதில் சிறப்புடையவராக விளங்ககின்றார்.
சித்திரப் போட்டியில் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்ற மாணவன்!!! Reviewed by The King on 8:08 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.