Propellerads

அஜீத்-அனுஷ்கா காட்சிகளை ரகசியமாக படம் பிடிக்கும் கெளதம்மேனன்!

அஜீத்-அனுஷ்கா காட்சிகளை ரகசியமாக படம் பிடிக்கும் கெளதம்மேனன்!

கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில்தான் அஜீத்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. ஆரம்பத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பைட் சீனில் நடித்த அஜீத், இப்போது அனுஷ்காவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் நடிக்கிறார்.

ஆனால், அஜீத்-அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது, மொத்த யூனிட்டையும் வெளியேற்றி விட்டு, கேமராமேன் உள்பட வெகுசிலரை மட்டுமே வைத்து தனி அறைக்குள் படப்பிடிப்பு நடத்துகிறாராம் கெளதம்மேனன். அப்படி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு யூனிட் நபர்கள் யாருமே செல்ல அனுமதி கிடையாதாம்.

மேலும், அந்த காட்சிகள் யூனிட் மூலம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி படமாக்கும் கெளதம்மேனன், தனது உதவி இயக்குனர்களிடம்கூட அந்த காட்சிகள் பற்றி இதுவரை சொல்லவில்லையாம். அவர்களும் சற்று தொலைவில் அமர்ந்திருக்கும் யூனிட்டோடுதான் அமர்ந்திருக்கிறார்களாம். .

அந்த வகையில், மொத்தம் 3 நாட்கள் அஜீத்-அனுஷ்கா இருவரையும் வைத்து ரகசிய படப்பிடிப்பு நடத்திய கெளதம்மேனன், யூனிட் நபர்களுக்கு வேலையே கொடுக்காதபோதும், அவர்கள் சம்பளத்தில் கைவைக்காமல் உரிய சம்பளத்தை கொடுக்க சொல்லிவிட்டாராம். 
அஜீத்-அனுஷ்கா காட்சிகளை ரகசியமாக படம் பிடிக்கும் கெளதம்மேனன்! Reviewed by The King on 8:17 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.