நீச்சல் உடை அணிய மாட்டேன் என்ற தமன்னாவின் சபதம் காற்றோடு போனது!
நீச்சல் உடை அணிய மாட்டேன் என்ற தமன்னாவின் சபதம் காற்றோடு போனது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள தமன்னா கவர்ச்சி ஹீரோயினாக நடித்திருந்தாலும் நீச்சல் உடை அணிந்து நடித்ததில்லை. இது பற்றி அவர் தனது பேட்டிகளில் குறிப்பிடும்போது, நடிப்பு மற்றும் காஸ்டியூம் அணிவது பொருத்தவரை எனக்கென்று சில கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டு அதன்படித்தான் இதுவரை நடித்து வந்துள்ளேன். நீச்சல் உடை அணிந்து நடிக்கும் எண்ணம் இல்லை. அணியவும் மாட்டேன். இது சபதம் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கட்டுப்பாடு காற்றோடு போய்விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹம்ஷகல்ஸ் என்ற இந்தி படத்தில் தற்போது தமன்னா நடித்து வருகிறார். சாஜித்கான் இயக்குகிறார்.
படத்தின் ஒரு காட்சியில் ஹீரோயின் நீச்சல் உடையில் தோன்ற வேண்டி இருந்தது. ஆனால் இதை தமன்னாவிடம் வற்புறுத்த இயக்குனர் விரும்பவில்லை. ஆனாலும் தமன்னாவை அழைத்து ஒரு காட்சியில் நீச்சல் உடை அணிந்து நடிக்க வேண்டி இருக்கிறது. நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்றார். இயக்குனரின் இந்த தன்மையான போக்கு தமன்னாவை கவர்ந்தது.
அவரால் மறுப்பு கூற முடியாமல் நீச்சல் உடை அணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இலியானா டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து மெயின் தேரா ஹீரோ என்ற படத்தில் நடித்தார். இதுவே தமன்னாவையும் நீச்சல் உடையில் நடிக்க தூண்டியதாம்.
நீச்சல் உடை அணிய மாட்டேன் என்ற தமன்னாவின் சபதம் காற்றோடு போனது!
Reviewed by The King
on
11:52 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .