திருமணத்தை மறைத்ததால் தெலுங்கு படத்திலிருந்து அமலாபால் நீக்கம்!
திருமணத்தை மறைத்ததால் தெலுங்கு படத்திலிருந்து அமலாபால் நீக்கம்!
நடிகை அமலாபால் விரையில் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த சமுத்திரக்கனியின் படத்திலிருந்து விலகி விட்டார். அதோடு புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார். இந்த நிலையில் திருமணத்தை மறைத்து தங்கள் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று குற்றம் சாட்டி வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்குப் படத்திலிருந்தும் அமலா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளர்.
இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது: இந்தப் படம் காதலை மையமாக கொண்டது. அமலா திருமணம் செய்து கொண்டு நடித்தால் அது படத்தை பாதிக்கும், படம் வியாபாரமாகது. திருமணத்தை இப்போது வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் முன்னரே முடிவு செய்துதான் வைத்திருந்துள்ளார். அதனை மறைத்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் படத்தின் இயக்குனர் ரமேஷ் வர்மா மிகுந்து கவலை கொண்டுள்ளார். முதல் கட்டமாக வெளிநாட்டில் பாடல் காட்சி எடுக்க திட்டமிட்டிருந்தோம். இப்போது அதனை கேன்சல் செய்து விட்டோம். படத்துக்காக வாங்கிய அட்வான்சை திருப்பி கேட்டிருக்கிறோம் என்கிறார்கள்.
இதுகுறித்து அமலா பால் கூறியிருப்பதாவது: இந்த நிறுவனம் என்னை முதலில் தொடர்புக் கொண்ட போது மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள கால கட்டத்தில் 45 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று கூற, நானும் அதற்கு உட்பட்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு பத்திரத்திலும் நாங்கள் பரஸ்பரம் கை எழுத்திட்டுக் கொண்டோம் .படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள பல்வேறு முறைகளில் முயற்சி செய்தேன் .தொடர்பில் வந்தாலும் திருப்திகரமான பதில் வரவில்லை .வெளி நாட்டில் படமாக்க போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை .
இந்த நிலையில் என்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது.
நான் அவர்களுக்கு கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே . இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூற வேண்டிய அவசியம் என்ன ? கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பல்வேறு உண்மையான காரணங்கள் இருக்க, என் திருமணத்தை சுட்டி காட்டி அவர்கள் புழுதி இறைப்பது அநாகரீகமானது .திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், எனக்கும் அப்படி தான் . தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது . நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ , இயக்குனருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை, இருக்கவும் மாட்டேன் , இந்த விளக்க உரை கூட யாரையும் குற்றம் சாட்டவோ, குறை கூறவோ இல்லை . என்னை அறிந்தவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலை கூறுவதுதான் .
திருமணத்தை மறைத்ததால் தெலுங்கு படத்திலிருந்து அமலாபால் நீக்கம்!
Reviewed by The King
on
11:27 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .