Propellerads

காமெடி நடிகருக்கு ஜோடியான அஞ்சலி!

காமெடி நடிகருக்கு ஜோடியான அஞ்சலி!


தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு படம் மூலம் கவனிக்கப்படும் நடிகையானவர் அஞ்சலி. அதன்பிறகு படிப்படியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், சேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்து முடித்தபோது, மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், அந்த நேரம் பார்த்து அவருக்கும், அவரது சித்திக்கும் குடும்ப பிரச்னை போர்க்களமானதால், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஓடிய அஞ்சலி, சில நாட்கள் மாயமாகி பின்னர் வெளியே வந்தார். ஆனால், அதன்பிறகு சில தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், அமெரிக்காவில் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டதாகவும் கடந்த சில மாதங்களாக செய்திகள் புகைந்தன.
அதன்பிறகு அமெரிக்காவுக்கு செல்வதை நிறுத்தி விட்டு, நான் எங்கும் செல்லவில்லை. இங்குதான் இருக்கிறேன் என்று மீண்டும் ஸ்டேட்மென்ட் கொடுத்த அஞ்சலியை இப்போது ஆந்திராவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் கண்டுகொள்வதில்லையாம். அதனால், புதிய படவாய்ப்பே கிடைக்காததால் இப்போது சீனிவாச ரெட்டி என்றொரு காமெடியனுக்கு ஜோடியாகியிருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி, இந்த படத்தில் புதுவரவு நடிகைகளுக்கு கொடுப்பது போன்றுதான் அஞ்சலிக்கு குறைவான சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். இதையும் விட்டால், தனது மார்க்கெட் அவுட்டாகி விடும் என்று வேறு வழியே இல்லாமல் இந்த படத்தில் தற்போது கமிட்டாகியிருக்கிறாராம் அஞ்சலி.
காமெடி நடிகருக்கு ஜோடியான அஞ்சலி! Reviewed by The King on 11:32 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.