பேஸ்புக், டுவிட்டரில் என் பெயரில் மோசடி -அசின்
பேஸ்புக், டுவிட்டரில் என் பெயரில் மோசடி -அசின்
நடிகர், நடிகைகள் பெயரில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து மோசடிகள் நடக்கின்றன. இது குறித்து பலர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள்.
இப்போது அசின் பெயரிலும் மோசடி நடந்துள்ளது. யாரோ மர்ம நபர் அசின் பெயரில் டுவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து பிற நடிகர் நடிகைகளுடன் தொடர்பு வைத்து உரையாடினார். இந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், ரிதேஷ் தேஷ்முக் போன்றோரிடமும் அசின் பேசுவது போலவே தொடர்பு வைத்து உரையாடினார்.
ரிதேஷ் தேஷ்முக் இந்த மோசடியை தற்போது அம்பலபடுத்தி உள்ளார். அசின் டுவிட்டரில் இல்லை. அவர் பெயரில் மோசடி நடக்கிறது என்று கூறியுள்ளார்.
இது அசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியானார். சமூக வலைத்தளங்களில் என் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் ரசிகர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் என்றும் அசின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அசின் தமிழில் கமலஹாசன், விஜய், சூர்யா, அஜீத், விக்ரம் போன்றோருடனும் தெலுங்கில் வெங்கடேஷ் பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, பவன்கல்யான் போன்றோருடனும் நடித்துள்ளார். இந்தியில் அமீர்கான், சல்மான்கான் அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சனுடன் நடித்துள்ளார்.
பேஸ்புக், டுவிட்டரில் என் பெயரில் மோசடி -அசின்
Reviewed by The King
on
1:07 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .