மனித உருவத்தில் குட்டியை ஈன்ற எருமை மாடு. தாய்லாந்து நாட்டில் பரபரப்புச் சம்பவம்
மனித உருவத்தில் குட்டியை ஈன்ற எருமை மாடு. தாய்லாந்து நாட்டில் பரபரப்புச் சம்பவம்!
இதுவரை நடக்காத புதுமையான சம்பவம் இது என்று தாய்லாந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் குட்டி போட்ட ஒரு எருமை மாடு, அந்த குட்டி மனித வடிவில் இருந்ததால் அந்த மாட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
எருமையின் அந்த குட்டி கை மற்றும் கால்கள் மட்டும் எருமை மாட்டின் தோற்றத்தில் இருந்தாலும், உடலின் மற்ற பகுதிகள் அனைத்தும் மனித தோற்றத்தை ஒட்டியே இருந்துள்ளது. ஆனால் அந்த குட்டி பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது.
இந்த புதுமையான எருமைக்கன்று தோன்றியதன் காரணமாக தாய்லாந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீய சக்திதான் மனித உருவில் பிறந்துள்ளதாக கருதி சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
புராணங்களில் மிருக முகத்துடனுடன், மிருக உடலுடனும் உலா வரும் கதைகளை படித்துள்ள பொதுமக்கள் உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அதிர்ச்சி அடைகின்றனர் என்பதுதான் உண்மை.
தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் இந்த எருமைக்குட்டியை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மனித உருவத்தில் குட்டியை ஈன்ற எருமை மாடு. தாய்லாந்து நாட்டில் பரபரப்புச் சம்பவம்
Reviewed by The King
on
10:23 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .