விக்ரம் என் குடும்பத்தில் ஒருவர்! விஜய் மனம் திறந்தார்
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே ஒரு விதமான ஈகோ இருந்து கொண்டே இருக்கும். ஆனால், சமீப காலமாக இதையெல்லாம் மறந்து அனைவரும் நட்பு பாராட்டி வருகின்றனர்.அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் சக நடிகர்கள் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். நேற்று நடந்த கப்பல் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய், விக்ரம் பற்றி மனம் திறந்து பேசினார்.இதில் ‘ நான் விக்ரமை எப்போதும் கென்னி என்று தான் அழைப்பேன், அவர் என் வீட்டிற்கு அடிக்கடி வருவார், சினிமாவை தவிர்த்து நிறைய பேசுவோம். அவர் என் குடும்பத்தில் ஒருவர்.மேலும், ஐ படத்தில் அவர் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நானும் அந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்’ என்று கூறினார்.
விக்ரம் என் குடும்பத்தில் ஒருவர்! விஜய் மனம் திறந்தார்
Reviewed by The King
on
12:28 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .