பாலிவுட் நடிகையானார் ஓவியா
பாலிவுட் நடிகையானார் ஓவியா
தமிழில், களவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகை ஓவியா. மெரீனா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், படங்களில் நடித்தார். தற்போது அகராதி, யாமிருக்க பயமே படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் களவாணிக்கு பிறகு பெரிய வெற்றி ஓவியாவுக்கு கைகூடவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகையாகிவிட்டார். ஜாட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். இது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம்.இதுகுறித்து ஓவியா கூறியிருப்பதாவது: என் முதல் இந்திப் படம் ஜாட். இது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள படம். சிலரால் பாதிக்கப்பட்ட நான் அவர்களை பழி தீர்ப்பது மாதிரியான கதை. நடிக்கும்போதே த்ரில்லாக இருந்தது. படப்பிடிப்புகள் ஹரியானாவில் நடந்தது. தற்போது சென்னையில்தான் இருக்கிறேன். யாமிருக்க பயமே, அகராதி படங்களுக்கு பிறகு மூன்று தமிழ் படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது என்றார்.
பாலிவுட் நடிகையானார் ஓவியா
Reviewed by The King
on
7:37 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .