Propellerads

விஜய் பற்றிய அநாகரிகமான பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – த.மு.மு.க தலைவர்

விஜய் பற்றிய அநாகரிகமான பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – த.மு.மு.க தலைவர்



நடிகர் விஜய் மற்றும் அவரது படங்கள் தொடர்பில் ஒருவர் தரக்குறைவாக பேசியமை குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த விவகாரத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இணைய தளத்தில் நடிகர் விஜய் பற்றி தரக் குறைவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் பேசி உள்ளார் என பலர் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது நடிகர் விஜய் குறித்து அவதூறாக பேசியவருக்கும் தமுமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இதுபோன்ற பேச்சுகளை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற அவதூறான பேச்சுகளை சமூக வலை தளங்களிலோ, இணையதளத்திலோ எழுதவோ, பேசவோ கூடாது என்பதை தமுமுக தலைமை தமது தலைமை நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அநாகரிகமான விமர்சனங்களுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். அது வேறு ஒரு இயக்கத்தின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த இயக்கத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
(  https://www.youtube.com/watch?v=KJvC39aLlPE  )  இது தளபதிக்கு வந்த அவமானமல்ல தமிழனுக்கு வந்த அவமானம் ..... இவன என்னசெய்யலாம் ???
விஜய் பற்றிய அநாகரிகமான பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – த.மு.மு.க தலைவர் Reviewed by The King on 7:27 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.