கத்தி படத்தில் தாடி கெட்டப்பில் விஜய்!
கத்தி படத்தில் தாடி கெட்டப்பில் விஜய்!
"துப்பாக்கி" படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா, ஜீல்லா ஆகிய படங்கள் விஜய் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்க வில்லை என்று தான் கூற வேண்டும். அதனால் தன் ரசிகர்களுக்கு திருப்தி தரும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் கத்தி படத்தில் முழு வீச்சில் இறங்கியுள்ளார் விஜய்.
இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என்பதால் நெகட்டிவ் ரோலிலும் அவரே நடிக்கிறார்.
அதுவும் இதற்காக தாடி, முடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் வருகிறாராம் விஜய். மேலும் அனாதை குழந்தைகள், மற்றும் இல்லாதவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்பவராக நடிக்கிறாராம். இந்த கேரக்டர் விஜய்யின் சினிமா கேரியரில் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.
கத்தி படத்தில் தாடி கெட்டப்பில் விஜய்!
Reviewed by The King
on
9:17 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .