தனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள்
தனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள்
'ராஞ்சனா' இந்தி படத்தையடுத்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார் இப்படத்தில் காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சினிமா ஜூனியர் நடிகராக இவரது கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பார்கள். தனுஷை பொறுத்தவரை ஒரே கல்லில் 5 மாங்காய் அடிக்க உள்ளார் என்றுதான்சொல்ல வேண்டும் என்கிறது படக்குழு.
இந்தியில் பிரபலமான இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, ரகேஷ் ஓம்பிரகாஷ் மெஹரா, கரண் ஜோஹர், அனுராக் பாசு, கவுரி ஷிண்டே ஆகிய 5 டைரக்டர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இருந்த இடத்திலிருந்தே 5 இயக்குனர்களை சந்தித்து நட்பை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, அப்படியே அவர்கள் படத்துக்காக அப்ளிகேஷன் போடும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைத்திருப்பது அவரை குஷியில் ஆழத்தி உள்ளது.
தனுஷ் படத்தில் 5 பாலிவுட் இயக்குனர்கள்
Reviewed by The King
on
9:26 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .