ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த்
ப்ரியா ஆனந்த் தமிழ்நாட்டுத் தங்கம். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சின்ன வயதில் இருந்தே சினிமாவுக்கு வரவேண்டும் என்று கனவு கண்ட ப்ரியா படித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். அல்பேனியா பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன் படித்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராட்டி, ஸ்பானிஷ் என்று ஆறு மொழிகளும் அம்மணிக்கு அத்துப்படி. 'வாமனன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த ப்ரியாவுக்கு 'புகைப்படம்', '180' போன்ற படங்கள் சரியாகக் கைகொடுக்கவில்லை. இந்தியில் 'இங்லீஷ் விங்லீஷ்' படத்தில் நடித்த பிறகு, தன்சுஹின் பார்வையில் பட்டார் ப்ரியா ஆனந்த். அப்போதுதான் அந்த ஜாக்பாட் அடித்தது.'எதிர்சீச்சல்' படத்தில் ஹீரோயினாக நடிக்க, கமிட் ஆனார். அந்தப் படம் ஹிட்டடித்ததும் சந்தோஷத்தில் மிதந்தார் ப்ரியா. 'வணக்கம் சென்னை', 'வை ராஜா வை', 'அரிமாநம்பி', 'இரும்புக்குதிரை' என்று ப்ரியா ஆனந்த் நடிக்கும் படங்களின் பட்டியல் ரொம்பப் பெருசு.
ப்ரியா ஆனந்த்
Reviewed by The King
on
6:45 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .