சிகரெட் பெட்டியின் 50 முதல் 60 வீதம் வரையான பகுதியில் எச்சரிக்கைப்படங்கள். நீதிமன்றம் உத்தரவு.
சிகரெட் பெட்டியின் 50 முதல் 60 வீதம் வரையான பகுதியில் எச்சரிக்கைப்படங்கள். நீதிமன்றம் உத்தரவு.
சிகரெட் பெட்டியின் 50 முதல் 60 வீதம் வரையான பகுதியில் எச்சரிக்கைப்படங்களை பிரசுரிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புகைப்பிடிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப்படங்களை பிரசுரிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இலங்கை புகையிலை நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் மாலினி குணரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவை பிறப்பித்துள்ளது.
படங்களுடன் கூடிய எச்சரிக்கையை பிரசுரிப்பதற்கு சிகரெட் பெட்டியின் 35 வீதமான பகுதி போதுமானது என்ற அடிப்படையில் வழக்கின் தீர்ப்பை அறிவிக்குமாறு இலங்கை புகையிலை நிறுவனம் தமது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தக் கோரிக்கையை ஆட்சேபித்த சுகாதார அமைச்சர் படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகம் 75 வீதமான பகுதியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் குழாம் இலங்கை புகையிலை நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக டி சில்வா சுகாதார அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
சிகரெட் பெட்டியின் 50 முதல் 60 வீதம் வரையான பகுதியில் எச்சரிக்கைப்படங்கள். நீதிமன்றம் உத்தரவு.
சிகரெட் பெட்டியின் 50 முதல் 60 வீதம் வரையான பகுதியில் எச்சரிக்கைப்படங்கள். நீதிமன்றம் உத்தரவு.
Reviewed by The King
on
8:54 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .