செல்போனில் ஆபாச படம் காட்டி மகள் பலாத்காரம் – வளர்ப்பு தந்தை கைது
செல்போனில் ஆபாச படம் காட்டி மகள் பலாத்காரம் – வளர்ப்பு தந்தை கைது'
செல்போனில் ஆபாச படம் காட்டி 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் . கூலி தொழிலாளி.
இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2 ஆவது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கும் அது 2 ஆவது திருமணமாகும். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது 11 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் வாழ்க்கை நடத்த சிரமப்பட்டு கொண்டிருந்தபோது துளசிதரனுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த பெண்ணும் அவரது மகனும் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியபோது 11 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் தாயார் விசாரித்தபோது தன்னை துளசிதரன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி கதறி அழுதாள்.
இதனால் பதறிப்போன அந்த பெண் மகளை சமாதானப்படுத்தி நடந்த விபரங்களை விசாரித்தபோதுதான் துளசிதரனின் கொடூர செயல்கள் வெளியானது.அந்த சிறுமியிடம் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து அடிக்கடி துளசிதரன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று அவர் மிரட்டியதால் அந்த சிறுமி பயந்து போய் தனக்கு நடந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்து உள்ளாள். இந்த கொடூர செயல் பற்றி வெஞ்ஞாரமூடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துளசிதரனை கைது செய்தனர். -
செல்போனில் ஆபாச படம் காட்டி மகள் பலாத்காரம் – வளர்ப்பு தந்தை கைது
Reviewed by The King
on
9:21 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .