Propellerads

சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல்

சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல். இப்போது இந்த மொபைல் நிறுவனம் இந்திய மார்கெட்டை குறிவைத்து அவர்களின் மொபைலை இந்தியாவில் களமிறக்கி உள்ளார்கள். இது கடந்த செவ்வாய்கிழமை முதல் விற்பனைக்கு வந்தது. இதன் பெயர் சியோமி எம்.ஐ. 3 ஆகும். இதனை இணையத்தில் மட்டும் தான் வாங்க முடியும் , அதுவும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் வாங்க முடியும். இந்த மொபைலின் விலை ரூபாய்.13,999 ஆகும். இதன் விற்பனை 22 ஆம் தேதி அன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட விற்பனைக்கு 5000 மொபைல்கள் வந்து உள்ளன.


ஆனால் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன. அனைவரும் ஒரே நேரத்தில் பிளிப்கார்ட் இணையத்தை அணுகியதால் அந்த தளம் சிறிது நேரத்திற்கு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதற்கு முன்பு மோட்டோ ஈ மொபைல் விற்பனைக்கு வந்த போது இது போல் நடந்தது. இன்று வரை அந்த மொபைலுக்காக இந்தியாவில் மட்டும் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மொபைலை வாங்கியவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை எல்லா கம்பெனிகளின் மொபைல்களை பயன்படுத்தியோரும் இது தான் சிறந்தது என்கிறார்கள். 2 வது சுற்று விற்பனைக்கு வந்த இந்த மொபைல் 5 நொடிகளில் விற்று தீர்ந்து விட்டது. அந்த அளவுக்கு இந்த மொபைல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 20,000 மொபைல்கள் விற்று  தீர்ந்து உள்ளன. அது தான் அதற்கு புதிய பிரச்சனையை கிளப்பி உள்ளது. இந்த மொபைலை வாங்குவதற்கு பலர் முன்பதிவு செய்து விட்டு காத்து இருந்தார்கள், ஆனால் சில நாட்கள் கழித்து அவர்கள் முன்பதிவு செய்யவில்லை என்று காட்டுகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளார்கள். உடனடியாக புக் செய்யலாம் என்று பார்த்தால் அவுட் ஆப் ஸ்டாக் என்று வந்துவிடுகிறது. 2.00 மணிக்கு தொடங்கிய விற்பனை 2.01 மணிக்கு தீர்ந்து விடுகிறது. இந்த மொபைலுக்கு விளம்பரம் தேடுவதற்காக பிளிப்கார்ட் நிறுவனமும் சியோமி நிறுவனம் சேர்ந்து இந்த நாடகத்தை நடத்துவதாக கூறுகிறார்கள். இதில் ஊழல் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. - See more at
சைனாவின் ஆப்பிள் மொபைல் என அழைக்கப்படுவது சியோமி மொபைல் Reviewed by The King on 8:43 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.