பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
பெருந்துறையை அடுத்துள்ள வள்ளிபுரத்தான் பாளையம், கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 49). விவசாயியான இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
அவற்றில் சினையான ஒரு பசு மாடு இவரது வீட்டிற்கு அருகில் உள்ள கரட்டாங்காடு பகுதியில் இருந்த பக்கவாட்டுச்சுவர் இல்லாத விவசாய கிணற்றில் நேற்று மாலை 3.30 மணியளவில் தவறி விழுந்தது. கிணற்றில் விழுந்து தத்தளித்த பசு மாடு சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் தத்தளித்தது. அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடனடியாக தங்கமுத்துக்கு தகவல் கொடுத்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பசு மாட்டினை மீட்க முயன்று முடியாமல் போகவே பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பசு மாட்டினை உயிருடன் மீட்டனர். சினையான பசு மாட்டினை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
Reviewed by The King
on
12:04 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .