யாழில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி! பலர் படுகாயம்
யாழ்.நாவாந்தறைப் பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உருவான வாய்த்தாக்கம் வாள் சண்டையாக முடிந்த நிலையில் இளைஞர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் மாலை நாவாந்துறைப் பகுதியில் உள்ள இரு விளையாட்டு கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.
இதன்போது மேற்படி இரு கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையிலும் வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது. அதனையடுத்து, அது பெரும் வன்முறையாக மாறியதில் இரு தரப்பும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலான ஆயுதங்களுடன் மோதியிருக்கின்றனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு பெருமளவு பொலிஸார் மற்றும் படையினர் அழைக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எனினும் மேற்படி நாவாந்துறை பகுதிக்குள் செல்லும் கடற்கரை வீதி மற்றும் சோனக தெரு ஆகியன படையினர் மற்றும் பொலிஸாரினால் மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்று மாலை ஆரம்பமான தாக்கம் இரவு 8மணிவரையில் நீடித்ததாகவும் தெரியவருகின்றது.
யாழில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி! பலர் படுகாயம்
Reviewed by The King
on
12:47 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .