ஏமாற்றம் அடைந்த சுனைனா!
ஏமாற்றம் அடைந்த சுனைனா!
காதலில் விழுந்தேன் சுனைனா, அதன்பிறகு நடித்த வம்சம் படம் அவரது நடிப்பை பேச வைத்தது.அதற்கடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் நடித்த நீர்ப்பறவை படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். அந்த அளவுக்கு எஸ்தர் என்ற கேரக்டராகவே மாறி நடித்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் சுனைனாவின் நடிப்பு பேசப்படவில்லை.
அதனால் பின்னர் தமிழ்ப்படங்களில் நடிப்பதில் போதிய ஆர்வம் இல்லாமல் தனது தாய்மொழியான தெலுங்குக்கு சென்று நடித்து வந்த சுனைனாவை, தான் தயாரித்து நடித்த நம்பியார் படத்துக்காக மீண்டும் கோலிவுட்டுக்கு கூட்டி வந்தார் ஸ்ரீகாந்த். இந்த படத்தில் சரோஜாதேவி கெட்டப்பில் நடித்திருக்கும் சுனைனாவுக்கு, இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, விஜயசேதுபதி நடிக்கும் வன்மம் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.
தமிழில் தற்போது விஜயசேதுபதி பேசப்படும் நடிகர் என்பதால், அந்த படத்தில் கமிட்டாக ஓடோடிச்சென்றிருக்கிறார் சுனைனா. ஆனால், படத்தின் கதையையும், அவரது கேரக்டர் பற்றியும் சொன்ன டைரக்டர் ஜெய் கிருஷ்ணா, இதில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் கழுகு கிருஷ்ணாவுக்குத்தான் நீங்கள் ஜோடி என்றாராம். இதனால் சுனைனாவுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டதாம். இருப்பினும், விஜயசேதுபதி இருக்கிற படம் என்பதற்காக ஒத்துக்கொண்டாராம். அந்த அளவுக்கு இப்போது நடிகைகளை கவர்ந்த நடிகராகியிருக்கிறார் விஜயசேதுபதி.
ஏமாற்றம் அடைந்த சுனைனா!
Reviewed by The King
on
6:54 PM
Rating:
Reviewed by The King
on
6:54 PM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .