நடிகர் விஜய்க்கு சிலை: ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படம் திரையரங்குகளில்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் சிலை ஒன்றை நிறுவி, அதை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று குரோம்பேட்டை வெற்றி திரை அரங்கில் விஜய் சிலையை நிறுவ உள்ளனர். இந்த சிலையை உருவாக்க கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை இளம் தமிழ் நடிகர்களுக்கு அவருடைய ரசிகர்கள் யாரும் சிலை வைத்தது கிடையாது. இதுவே முதல் முறை. விஜய் சிலையை ‘தலைவா’ படத்தில் விஜய் நடித்துள்ள தோற்றத்தில் உருவாக்கியுள்ளனர். இன்று நிறுவ உள்ள விஜய் சிலையை காண வெற்றித் திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

Reviewed by The King
on
5:48 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .