இரவு விருந்துகளில் நயன்தாரா - சிம்பு ஜோடி
இரவு விருந்துகளில் நயன்தாரா - சிம்பு ஜோடி
நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் சண்டை, இருவரும் பேசிக் கொள்வதில்லை, சிம்புவுடன்
நடிக்க நயன்தாரா ஏகத்துக்கும் கண்டிஷன் போடுகிறார் என்றெல்லாம் பொய்யாய் செய்திகளை சிலர்
பரப்பிக் கொண்டிருக்க, அவர்களோ ஜோடியாய் இரவு விருந்துகளில் பங்கேற்று ஜாலியாக
இருப்பதை போட்டோக்களெடுத்து ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் த்ரிஷா. தமிழ்
சினிமாவின் முன்னணி நடிகைகள் அத்தனை பேரும் ஆஜராகிவிட்டார்கள். அமலா பால், ரம்யா
கிருஷ்ணன், நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா என பலரும் பங்கேற்ற இந்த விருந்துக்கு,
ஜோடியாக வந்தனர் சிம்புவும் நயன்தாராவும். நெருங்கி அணைத்தபடி போஸ் கொடுத்தனர். மற்ற
நடிகைகள், த்ரிஷாவின் அம்மா, மற்றும் நண்பர்களுடனும் இதே போல கட்டிப்பிடித்து போஸ்
கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இரவு விருந்துகளில் நயன்தாரா - சிம்பு ஜோடி
Reviewed by The King
on
9:01 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .