இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!
இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!
இலங்கையில் கொலை உட்பட்ட குற்றச்செயல்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 20 கொலைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தக்கொலை சம்பவங்கள் கிரியுல்ல, குருநாகல், மொனராகலை, எல்பிட்டிய, மகா ஓயா, புத்தள, வெல்லம்பிட்டிய, கிளிநொச்சி, அத்துருகிரிய போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இதில் குருநாகலில் இடம்பெற்ற கொலையில் இராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார்.
அவர், பெண் ஒருவரிடம் கூலியை பெற்றுக்கொண்டு ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை குறித்த கொலைகளில் பெரும்பாலானவை குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் உரிய வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வெளியாகவில்லை.
இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!- கடந்த மாதத்தில் மட்டும் 20 கொலை சம்பவங்கள்!
Reviewed by The King
on
7:23 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .