யாழ் வைத்திய சாலையில் பிள்ளை பெறும் தாய்களைத் திட்டுவது அம்பலம்…
யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் பல மோசமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக போதனா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அவர் பிரசவ வலியால் கத்தியவேளை அங்கே நின்ற தாதி ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் இப்ப வந்து ஏன் என் கழுத்தை அறுக்கிறாய் என்று மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
அத்தோடு அருகில் இருந்த தாதிமார் அதனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தும் உள்ளார்கள். உன் புருசன் அரசாங்க உத்தியோகத்தில் தானே இருக்கிறார். அப்படி என்றால் பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்கு சென்றிருக்கலாமே என்று தாதி கூறியுள்ளார்.
ஆனால் எனக்கு இது முதல் பிரசவம். பயம் காரணமாக தான் நான் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்தேன் என்று அந்த அப்பாவிப் பெண் கூறியுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள தாதிமார்கள் மிகவும் அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள். அதனால் தான் எனது மனைவியை நான் அங்கே சேர்த்தேன் என்று கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆனால் அங்கே வேலைபார்க்கும் தாதிமாரோ இவ்வாறு வரும் கர்பிணிப் பெண்களை , திட்டியே சாவடிப்பதாக பலர் கூறியுள்ளார்கள். கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, தகாத வார்த்தைகளைப் பேசுவது இவர்கள் நாளாந்த பழக்க வழக்கம் ஆகிவிட்டது என்கிறார்கள்.
யாழ் வைத்திய சாலையில் பிள்ளை பெறும் தாய்களைத் திட்டுவது அம்பலம்…
Reviewed by The King
on
1:16 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .