சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து : 24 பேர் உயிரிழப்பு
பீஜிங் : நிலக்கரி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக விளங்கும் சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு அரசுக்கு சொந்தமான 'புக்சின் நிலக்கரி நிறுவன' சுரங்கத்தில் இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் 1.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு மட்டும் சுரங்க விபத்தில் 1049 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாடு பலப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ககப்படுகிறது.
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து : 24 பேர் உயிரிழப்பு
Reviewed by The King
on
10:39 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .