லா லிகா தொடரில் அதிக கோல் : மெஸ்ஸி அபார சாதனை
மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமை பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது. அவர் ஹாட்ரிக் அசத்தலுடன் 253வது கோல் அடித்து முதலிடத்துக்கு முன்னேறினார். செவில்லா அணியுடன் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 51 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 21, 72 மற்றும் 78வது நிமிடத்தில் கோல் அடித்தார். நெய்மர் (49’), ராகிடிக் (65’) தலா ஒரு கோல் போட்டனர்.
பார்சிலோனா அணியில் இணைந்து பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மெஸ்ஸி, நேற்று 2வது கோல் அடித்தபோது ஸ்பானிஷ் லீக் லா லிகா கால்பந்து போட்டித் தொடர் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்தார் (289 போட்டி). முன்னதாக, 194050களில் அத்லெடிக் பில்போ அணி வீரர் தெல்மோ ஸரா 251 கோல் போட்டு (277 போட்டி) முதலிடத்தில் இருந்தார்.
லா லிகா தொடரில் அதிக கோல் : மெஸ்ஸி அபார சாதனை
Reviewed by The King
on
3:51 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .