75-வது பிறந்த நாள்: முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவின் 75-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மோடி தனது டுவிட்டர் இணையதளத்தில், ‘முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளில், அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
முலாயம் சிங் யாதவின் 75-வது பிறந்த நாளையொட்டி, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் 2 நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாரட் வண்டியில் அவரை ஊர்வலமாக அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
75-வது பிறந்த நாள்: முலாயம் சிங் யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Reviewed by The King
on
7:34 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .