Propellerads

jaffnanews

வாக்குமூலம்- கூட வந்த கபிலண்ணா மத்தியின் பழைய மாணவன், துவாரகசீலன் ஒன்-டிரைவ் அடித்த பந்தொன்றை எல்லைக்கோட்டுக்கு வெளியே வந்த போது நானும் கபிலும் மத்திய கல்லூரியின் வாசலுக்கு நேருள்ள எல்லையால் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் இருக்கும் மணிக்கூட்டு முனையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்- அதே முனையில், மத்தியின் பழைய மாணவர் கூடாரத்தினுள் இருக்கையிலேயே மதுசன் பூங்கா முனையிலிருந்து சுழல் வீசிக் கொண்டிருந்தார். கொஞ்சம் அடி விழத் தொடங்கியமையால் அண்மித்த கள த் தடுப்பாளர்களை வெளியெடுத்து விட்டிருந்த வியூகம்- அந்தப் பந்துக்கு அணித்தலைவரும் மத்தியின் இலக்கு காப்பாளரும் முறையிடுவதும், சகவீரர்களை நோக்கி ஓடுவதும் தெரிகிறது. துவாரகசீலன் சோகமாக களத்தின் மறுமுனையை அண்மித்த தூரம் வரை நடந்து கொண்டிருக்க, ஆதரவாளர்களால் சூழப்பட்ட வீரர்களை கடந்து ஒலிபெருக்கி கூடம் இருக்கும் திசையை நோக்கி நடந்து வந்தார் இரண்டாம் நடுவர். இரண்டு கைகளையும் தோளின் குறுக்காக மடித்து இருமுறை "மன்னிப்பு" சைகை செய்து கைகளை பக்கவாட்டில் அசைத்து "இல்லை" என்ற குறிப்பை தெரிவிக்க, ஒலிபெருக்கியில் "மன்னிக்கவும்- அது ஆட்டமிழப்பு இல்லை" என்று தமிழில் அறிவிப்பு வருகிறது. தான் முன்னேறிய தூரம், ஸ்டம்பிங் செய்ய இயலுமான நீண்ட இடைவெளி என்பதை தெரிந்தே துவாரகசீலன் நடந்தான்- ஆனாலும், ஸ்டம்பிங் செய்யாமலே தான் ஆட்டமிழப்பு கோரிய மத்தியின் இலக்கு காப்பாளரும், இலக்குகள் தகர்க்கப்படாமல் இருப்பதை கவனியாத நடுவரும் இந்த குழப்பத்தில் மனச்சாட்சி திறந்து பேசியிருந்தால் நல்லதே நடந்திருக்கும். (கடைசி வரை இலக்குகள் தகர்க்கப்படாமல் அப்படியே இருந்தன) ஆதரவாளர்களால் சூழப்பட்ட முதல் நடுவருக்கே அடி விழுந்திருக்க வேண்டும், அடுத்த 2-3 நிமிடங்களில் மத்தியின் வீரர்கள் களத்தை விட்டு வெளியேறி கூடாரம் திரும்புவது தெரிகிறது. நடுவரால் மீள அழைக்கப்பட்ட துவாரகசீலனும் சிந்துஜனும் இறுதிவரை களத்திலிருந்து வெளியேறவோ தரையில் உட்காரவோ இல்லை- சுமார் ஒரு மணி நேரத்திலும் மேலாக அலுவலகத்தில் உள்ளே நடந்த கலந்துரையாடலுக்கு பிறகு, அணித்தலைவர் என்ற ரீதியில் அலுவலகத்துக்குள் அழைக்கப்படும் வரை "து.சீலன்" அங்கேயே நின்றான். அன்பான தம்பிகளே- வலிப்பது உண்மை தான்!! உன்னை-என்னை-உங்களை-எங்களை ஊட்டிய தாய்மடியின் நேர்மைக்கும், வெண்மைக்கும் களங்கம் நேராமல் நடக்கவும், ஓடவும் இறுதியில் "உயரவும்", "பறக்கவுமே" நாங்கள் பழக்கப்பட்டிருக்கிறோம்- "வெற்றி"க்காக கீழ் இறங்கி விடலாம் என்பது, எங்களுக்கு "உயரங்களை" கற்பித்தவர்களின் கனவில் கூட கிடையாது. வேண்டாமே அது, "வெற்றி"யே ஆயினும்!
jaffnanews Reviewed by The King on 8:05 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.