சவுதி அரேபியாவில் சாலை விபத்து: 5 இந்தியர்கள் பலி !
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்-டெய்ப் விரைவு சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் கேரளாவை சேர்ந்த 5 இந்தியர்கள் பலியானார்கள்.
டெய்பிலிருந்து 150 கி.மீ தொலைவிலுள்ள ரிதுவானில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென வேனின் டயர் வெடித்ததில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கேரளாவை சேர்ந்த முகமது சலீம், முகமது நிவாஸ், நவ்ஷாத், தொண்டியில் கொரு ஸ்ரீ தரன், கொடியட்டில் ஜனார்தனன் ஆகியோர் பலியானார்கள். விபத்தில் காயமடைந்த மலப்புரத்தை சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷை சேர்ந்த மற்றொரு நபரும் கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சவுதியில் கடந்த மாதத்தில் கூட ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உள்பட நான்கு பேர் சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் சாலை விபத்து: 5 இந்தியர்கள் பலி !
Reviewed by The King
on
7:51 AM
Rating:
Reviewed by The King
on
7:51 AM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .