முத்த ஸ்டேட்மெண்ட் - நடிகைக்கு பள்ளி நிர்வாகம் கண்டிப்பு!
முத்த ஸ்டேட்மெண்ட் - நடிகைக்கு பள்ளி நிர்வாகம் கண்டிப்பு!
யாருடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன்னு லட்சுமிகரமான மேனன் நடிகை விடுத்த பகிரங்க ஸ்டேட்மெண்ட் அவர் படிக்கும் பள்ளி வரைக்கும் எதிரொலித்திருக்கிறதாம். என்னதான் நடிப்பு என்றாலும் மைனர் பொண்ணு இப்படி பேசலாமா, நடிக்கலமா என்று பள்ளியின் நிர்வாக குழு தீவிரமா யோசிச்சிருக்காங்க. நடிகையோட தாய்குலத்தை கூப்பிட்டு "உங்கள் மகள் பெரிய நடிகையாயிட்டாங்க அதனால அவரை வீட்டுலேருந்து பிரைவேட்டா படிக்கச் சொல்லுங்க"ன்னு சொல்லிட்டாங்களாம். பயந்துபோன தாய்குலம் இனி அப்படி பேசாம பாத்துக்கிறேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு வந்தாராம். வந்த வேகத்தில் மகளை கண்டிச்ச தாய்குலம் இனி முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்னு ஸ்டேட்மெண்ட் விடச் சொல்லியிருக்காராம். இந்த விஷயத்துல அம்மா மகளுக்குள் சின்ன வருத்தம் உண்டாகிடுச்சாம். விரைவிலேயே நடிகையிடமிருந்து முத்த மறுப்பு அறிக்கை வரலாம் என்கிறார்கள்.
முத்த ஸ்டேட்மெண்ட் - நடிகைக்கு பள்ளி நிர்வாகம் கண்டிப்பு!
Reviewed by The King
on
6:46 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .