Propellerads

இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா!

இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா!

தற்போது சுந்தர்.சி நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில் வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹன்சிகாவுக்கு கூட சந்திரமுகி ஜோதிகா போன்று ஒரு அதிரடியான கதாபாத்திரம் என்று சொல்கிறார்கள். இப்படத்துக்கு பரத்வாஜ் இசையமைக்கிறார்.

இந்த படத்தையடுத்து அஜீத்தை வைத்து சுந்தர்.சி படம் இயக்குவார் என்று குஷ்பூதரப்பில் இருந்து டுவிட் செய்திகள் அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தாலும், அதுபற்றி சுந்தர்.சி இப்போதுவரை வாய் திறக்கவில்லை. இவர் அஜீத்திடம் கதை சொன்னாரோ, அதைக்கேட்டு அஜீத் நடிப்பதாக கூறியிருக்கிறாரோ எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், விமல், சிவா, அஞ்சலி, ஓவியாவை வைத்து தான் இயக்கிய கலகலப்பு படத்தை மீண்டும் இயக்கும் முயற்சியில் அடுத்து இறங்கப்போகிறாராம் சுந்தர்.சி., அந்த படத்தில் முந்தைய கூட்டணியில் இடம்பெற்ற விமல், சிவா இருக்கிறார்களாம்.

மற்றபடி மெயின் ரோலில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்த சித்தார்த்-ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்களாம்.

கலகலப்பு முதல் பாகத்தில் அஞ்சலி, ஓவியா இருவரும் போதும் போதும் என்ற அளவுக்கு கவர்ச்சி சேவை செய்ததை மனதில் கொண்டு இப்படத்தில் அவர்கள் இரண்டு பேருக்கும் சேர்த்து ஹன்சிகா இறங்கி அடிக்கப் போகிறாராம்.
இறங்கி அடிக்கப் போகும் ஹன்சிகா! Reviewed by The King on 2:02 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.