Propellerads

கோண்டாவில் – உரும்பிராய் குழு மோதல் ஒருவர் பலி. பதட்ட நிலை தொடர்கிறது!

கோண்டாவில் – உரும்பிராய் குழு மோதல் ஒருவர் பலி. பதட்ட நிலை தொடர்கிறது!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் பெருக்கெடுத்துள்ளது, மது, மாது, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருங்காலத்தைத் தொலைத்து வருகின்றன இளம் தமிழ் சமூகம்.

யுத்தம் ஓய்ந்து தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட எத்தனிக்கும் சமயத்தில் தமிழர் பகுதிகளில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் என்பவற்றால் மீண்டும் பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள் தமிழ்மக்கள். 
 
அந்தவகையில் கோண்டாவிலில் நேற்று 


முந்தினம் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவமும் கொலையும் அப்பகுதி மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான முழுவிவரம் வருமாறு,
 
கோண்டாவில் அரசடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள வீதியில் லட்சுமி நாராயணன் கோவில் பகுதி வரை குறித்த ஒரு சமூகத்தினர் பெருமளவு வாழ்ந்து வருகின்றார்கள். அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் உரும்பிராய் சிவகுலவீதியில் வாழ்ந்து வருகின்றனர். இரு பகுதியினருக்குள்ளும் உறவினர்களும் இருப்பதாகத் தெரியவருகின்றது.
 
இரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாக பெண் ஒருவரின் காதலால் அடிக்கடி அடிதடி நடந்து வந்ததாகத் தெரியவருகின்றது.
 
உரும்பிராய் சிவகுலவீதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கோண்டாவில்  பகுதியைச் சேர்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காதலித்துவந்துள்ளார்.
 
இந்தக் காதலால் சிவகுல வீதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு பொறாமை இருந்ததாகவும் அறிய முடிகின்றது. இதனால் அப்பகுதியில் இரவில் கூடும் சிலர் குறித்த யுவதி அந்த வீதியால் செல்லும் போது தகாத வார்த்தைகளால் ஏசுவதாகத் தெரியவருகின்றது.
 
சிவகுல வீதியில் இருக்கும் சில இளைஞர்கள்  கஞ்சா மற்றும் போதைப் பொருள்களுக்கும் மதுவுக்கும் அடிமையானவர்கள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களே இவ்வாறு அப்பகுதியில் நின்று பெரும் அட்டகாசங்கள் புரிவதாகவும் யுவதி உட்பட்டவர்களை கேலிசெய்பவர்களும் அவர்களே எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தான் காதலிக்கும் யுவதியை கேலிசெய்ததை அறிந்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் விளையாட்டு மைதானத்தில் வைத்து சிவகுல வீதியைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கியதாகத் தெரிவருகின்றது. இதனால் ஏற்பட்ட பகையே தற்போது கொலையில் முடிவடைந்துள்ளது.
 
கோண்டாவில் அரசடிப் பிள்ளையார் கோவில் அருகில்  தனது வீட்டில் நின்ற யுவதியைக் காதலிக்கும் இளைஞனின் தம்பியை சிவகுல வீதியைச் சேர்ந்தவர்கள் தாக்கிவிட்டு ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து அவர்களைத் துரத்திப் பிடித்த கோண்டாவில் இளைஞர்கள் அவர்கள் மூவரையும் கயிற்றால் கட்டித் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவர்களில் ஒருவரின் கயிற்றை அவிழ்த்து விட்டு ‘ஒரு அப்பனுக்கு பிறந்வர்கள் உன்ர பகுதியில் இருந்தால் அவர்களை இங்கு கொண்டு வாடா’ எனத் தெரிவித்து அடித்துக் கலைத்துள்ளனர்.
 
இதனை தனது இடத்திற்கு வந்து தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார் அடி வாங்கிய நபர். உடனடியாக அங்கு நின்றவர்கள் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தமது நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்து வரவழைத்து சாரய பாரில் இருந்து எடுக்கப்பட்ட கால் போத்தல்கள் கொண்ட சாராயப் போத்தல்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்து குடிக்கப் பண்ணி தமது கொலை வெறியை சாராய வெறியுடன் ஏற்றி ஏனைய இரு இளைஞர்களைக் கட்டி வைத்திருந்த இடத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 5 பேர் வீதம் குறைந்தது நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் சென்றதாகத் தெரியவருன்றது.
 
இவர்கள் அங்கிருந்து புறப்பட்டதை அப்பகுதியில் இருந்து அவதானித்து புலனாய்வு செய்து கொண்டிருந்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவன் அங்கிருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளான்.
 
தமது பக்கம் அவ்வளவு ஆக்கள் இல்லாது 12 பேரே அங்கு இருந்துள்ளதால் உடனடியாக கட்டி வைத்திருந்த இளைஞர்களை அவிழ்த்து விட்டுவிட்டு கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந் நிலையில் தமது தரப்பில் கட்டி வைத்தவர்களை விடுவித்தபின்னரும் கொலை வெறி அடங்காத சிவகுலவீதியைச் சேர்ந்த ரவுடிகள் காதலித்த இளைஞனின் வீட்டுக்குள் வாளுகளுடன் புக முற்பட்ட போது அங்கு நின்ற இளைஞனின் தம்பி அவர்களை வீட்டு வளவினுள் நுளைய முடியாதவாறு கேற்றை அமர்த்தி வைத்திருந்துள்ளார்.
 
அந் நேரத்தில் கேற்றின் மேற் பகுதியால் பிடித்திருந்தவனின் கழுத்தை வெட்டியுள்ளனர் சிவகுலவீதியைச் சேர்ந்த ரவுடிகள். அதன் பின்னர் கேற்றைத் திறந்து உள்ளே சென்றவர்கள் அங்கிருந்த காதலித்த இளைஞனின் சகோதரியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட போது அதைத் இளைஞர்  தடுத்து நிறுத்தி முற்பட்ட போது அவர்களுக்கு வாள்களினால் வெட்டு வீழ்ந்துள்ளது.
 
இதே நேரம் கழுத்தில் வெட்டு வீழ்ந்த இளைஞனர் இறந்து விட்டதாக அங்கு நின்ற ரவுடிகளில் ஒருவன் கூறவே அவர்கள் ஓடித் தப்பியுள்ளனர்.
 
இந்தக் கொலையை அடுத்து கொலையுண்டவரின் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தமது நண்பர்கள் உட்பட ஏராளமானவர்களைத் திரட்டிச் சென்று உரும்பிராய் சிவகுலவீதியைச் சேர்ந்தவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர். இவர்கள் அங்கு சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஓடித்தப்பிவிட்டதாகத் தெரியவருகின்றது.
 
இந்தச் சம்பவங்களை அடுத்து அப்பகுதியில் பொலிசாரும் , இராணுவத்தினரும் வரத் தொடங்கவே அனைவரும் ஓடித்தப்பிவிட்டனர். தற்போது இறந்த இளைஞனின் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்குழு கோண்டாவில் பகுதியில் தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளனர்.
 
பொலிசாரோ, இராணுவத்தினரோ யார் நின்றாலும் சிவகுல வீதியைச் சேர்ந்தவர்கள் பலரை காவு கொண்டே தீருவது என்ற சபதத்தை இவர்கள் எடுத்துள்ளதாகவும்  இளைஞனின் சடலம் எடுப்பதற்கும் தாம் இவற்றைச் செய்து முடிப்பதாகவும் அங்கு நிற்கும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதே வேளை பொலிசாரும் இராணுவத்தினரும் சிவகுல வீதியைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட தம்மை பொலிசார் கவனத்தில் எடுக்காது விட்டதாகவும் கோண்டாவில் பகுதிய இளைஞர்குழு தெரிவித்துள்ளது.
 
அத்துடன் வாளால் இறந்த இளைஞனை வெட்டியவுடன் தாம் பொலிசாருக்குத் தகவல்கள் தெரிவித்த போதும் பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு வரவில்லை என்றும் வாளால் வெட்டியவர்களை தாம் அடையாளம் காட்டுவதாகத் தெரித்த போதும் பொலிசார் அதனைக் கருத்தில் எடுக்கவில்லை எனவும் கோண்டாவில் பகுதி இளைஞர் குழு தெரிவித்துள்ளது.
 
காவாலிகளிடம் இருந்து அப்பாவிகளைக் காப்பாற்றும் இராணுவத்தினர் இவ்வாறான கடும் போக்கான ரவுடிகளை அடக்குவதற்கு பொலிசாரே இராணுவத்தினரை வரவழைத்து அங்கு நிலை நிறுத்தியுள்ளனர். வடபகுதியில் மூலைக்கு மூலை இராணுவம் நிற்கும் போது நடைபெறாத சம்பவங்கள் இப்போது அரங்கேறத் தொடங்கியுள்ளது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கோண்டாவில் – உரும்பிராய் குழு மோதல் ஒருவர் பலி. பதட்ட நிலை தொடர்கிறது! Reviewed by The King on 10:34 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.