ஈரோட்டில் இன்று அ.தி.மு.க.வினர் 2–வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம்
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில சிறையில் இருக்கும் அவரது ஜாமீன் மனுவை பெங்களுர் ஐகோர்ட்டு நேற்று நிராகரித்தது.
இதை தொடர்ந்து அதி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
முதலில் ஜாமீன் கிடைத்ததாக வெளியான தகவலையொட்டி ஈரோடு எம்.ஜி.ஆர் சிலை அருகே அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சோகத்தில் மூழ்கினர். பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்று கோரி ஈரோடு நாச்சியப்பா வீதியில் அ.தி.மு.க.வினர் 2 பேர் நேற்று மதியம் முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் பாஸ்கி, ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் குமார் ஆகிய 2 பேரும் இந்த சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் இன்று 2–வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோட்டில் இன்று அ.தி.மு.க.வினர் 2–வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம்
Reviewed by The King
on
11:31 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .