உடை மாற்றும் ஆபாச வீடியோ: ராய் லட்சுமி விளக்கம்
‘முனி-2 காஞ்சனா’, ‘மங்காத்தா’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவரைப் பற்றிய வதந்திகள் கோலிவுட்டில் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. இவர், கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியுடன் காதலில் விழுந்தார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது. அதன்பிறகு, அது வெறும் வதந்தியே என்று அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில், ராய் லட்சுமி பற்றி மேலும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. ராய் லட்சுமி தோற்றத்தில் உள்ள பெண் தனது மேலாடையை அணிவது போன்ற 20 நிமிட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவலாக உலவி வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் அந்த வீடியோவில் இருப்பவர் ராய் லட்சுமிதான் என்று கூறிவருகின்றனர். இது திரையுலக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ராய்லட்சுமியிடமே கேட்டபோது, “இதுவரைக்கும் அந்த வீடியோவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அதனைப் பார்த்த நண்பர்கள் அந்த வீடியோவில் தோன்றும் பெண் என்னுடைய முகத்தோற்றத்தை கொண்டவர் போலவே இருக்கிறார் என்று கூறினார்கள். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், புத்திசாலித்தனமாக அந்த பெண்ணின் முகத்தை முழுவதுமாக அந்த வீடியோவில் காண்பிக்கவே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் திருமணமான பெண்கள் அணிந்திருப்பதுபோல காலில் மெட்டி அணிந்துள்ளார்.
நான் நீண்டநாளாக சினிமாவில் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை சமாளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த வீடியோவால் முதல் முறையாக சிறிது பதற்றம் அடைந்துள்ளேன்” என்று கூறினார்.
உடை மாற்றும் ஆபாச வீடியோ: ராய் லட்சுமி விளக்கம்
Reviewed by The King
on
1:40 AM
Rating:
No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .