உத்தரகாண்டில் ஆறு பேரை தாக்கிய சிறுத்தையை அடித்துக்கொன்ற கிராம மக்கள்
உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டத்திற்குட்பட்ட சொர்காலியா கிராமத்தில் ஆறு பேரை கடித்த சிறுத்தையை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
கடந்த திங்கட்கிழமையன்று அக்கிராமத்திற்குள் நுழைந்த அந்த சிறுத்தை ஆறு பேரை கடித்ததால் மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். இதையடுத்து சிறுத்தை சுற்றிக்கொண்டிருந்த பகுதிக்கு போலீசாரும், வனத்துறையினரும் விரைந்தனர். ஆனால் அவர்கள் வந்து சேருவதற்குள்ளாகவே சிறுத்தையை கண்டுபிடித்த பொது மக்கள் அதை அடித்துக்கொன்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் அம்மாநிலத்தில் சிறுத்தை தாக்கியதால் 239 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 397 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே சமயம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 507 சிறுத்தைகள் இயற்கையாகவும், 251 சிறுத்தைகள் விபத்திலும், 51 சிறுத்தைகள் வேட்டைக்காரர்களாலும் பலியானதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் ஆறு பேரை தாக்கிய சிறுத்தையை அடித்துக்கொன்ற கிராம மக்கள்
Reviewed by The King
on
6:54 AM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .