Propellerads

ஆண்ட்ரியாவுடனான சர்ச்சை முத்தத்திற்கு விளக்கம் அளித்த அனிருத்! -


இந்திய சினிமாவில் ரகுமானுக்கு பிறகு முதல் படத்திலேயே ஆல் டைம் ஹிட் ஆல்பத்தை கொடுத்தவர் அனிருத். இவரை தேடி புகழ் வந்தாலும், சர்ச்சைகளும் பின் தொடர்ந்து வரத்தொடங்கியது.
ஆண்ட்ரியாவுடனான முத்தம் நெட்டில் பரவ அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இது குறித்து அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் ” ’கொலவெறி வைரல்’னு இன்டர்நெட் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.
ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க. ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.”என்று கூறியுள்ளார்.
-
ஆண்ட்ரியாவுடனான சர்ச்சை முத்தத்திற்கு விளக்கம் அளித்த அனிருத்! - Reviewed by The King on 1:25 AM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.