அஜீத்தா? சூர்யாவா?
அஜீத்தா? சூர்யாவா?
சினிமா வாழ்க்கையில் சில இடர்களை சந்தித்த கெளதம்மேனன் தனது சினிமா மார்க்கெட்டை தாங்கி பிடிக்க, மார்க்கெட் உள்ள பெரிய ஹீரோவுடன் படம் இயக்கினால் பிரகாசிக்க முடியும் என நினைத்தார். இதனால் முதன் முதலில் சூர்யாவுக்கு கதை சொன்னார். இதன் பிறகு படத்தலைப்பு வைத்து சில தயாரிப்பு பணிகள் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென்று சூர்யா விலகி விட்டார். இதன் பிறகு கெளதம், அஜீத்தை வைத்து இயக்க போவதாக அறிவித்து படத்தின் ஷீட்டிங்கை பணியை தொடங்கி விட்டார். இந்த சமயத்தில் தான் சூர்யாவுக்கு ஒரு தகவல் போனது. தனக்கு சொன்ன கதையையே அஜீத்துக்கு சொல்லி, சூர்யாவிற்காக சொன்ன மாற்றங்களை செய்யாமல் அப்படியே நடிக்கவிருக்கிறார் அஜீத் என்ற செய்தி வந்தது. இதனால் கடுப்பான சூர்யா அஜீத் படம் தியேட்டருக்கு வரும் போது, அதே நேரத்தில் தனது படமும் வரவேண்டும் என்ற வைராக்கியத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு படத்தில் நடிப்பதாக திடீரென அறிவிப்பு செய்து அவசர அவசரமாக பூஜை செய்திருக்கிறார். இதனால் ரசிகர் அறிவது சிம்பு – தனுஷ் ரசிகர்கள் மோதல் போய் இப்போது அஜீத் – சூர்யா மோதல் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அஜீத்தா? சூர்யாவா?
Reviewed by The King
on
8:50 AM
Rating:
Reviewed by The King
on
8:50 AM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .