ஜூன் 12ல் செட்டிநாட்டு முறைப்படி விஜய்-அமலாபால் திருமணம்: 7ல் கேரள முறைப்படி நிச்சயதார்த்தம்!!!
ஜூன் 12ல் செட்டிநாட்டு முறைப்படி விஜய்-அமலாபால் திருமணம்: 7ல் கேரள முறைப்படி நிச்சயதார்த்தம்
இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள். சாதாரண நடிகையாக இருந்த அமலாபாலை தெய்வதிருமகள் படத்தின் மூலம் பெரிய நடிகையாக்கியதுடன், விஜய்யுடனும் நடிக்க வைத்தார் விஜய். அது முதல் விஜய்யை காதலிக்க ஆரம்பித்தார் அமலாபால். இருவரின் காதலுக்கும் அமலா தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தாலும் விஜய் தரப்பிலிருந்து கிடைக்காமல் இருந்தது. இப்போது இரு தரப்பினரும் சம்மதித்துவிட்டார்கள்.
இதனால் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பி விட்ட விஜய் தன் திருமணம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் திருமணம் ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் கசிந்திருக்கிறது. வருகிற ஜூன் 7 ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் கேரள முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதில் விஜய், அமலாபால் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
ஜூன் 12ந் தேதி சென்னை அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் காலை 10 மணிக்கு திருமணம் நடக்கிறது. இதில் இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். அதே ஹாலில் மாலை 6 மணிக்கு நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். விழாவில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. திருமண அறிவிப்பை இன்று அல்லது நாளை இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் இணைந்து அறிவிக்க இருக்கிறார்கள்.
ஜூன் 12ல் செட்டிநாட்டு முறைப்படி விஜய்-அமலாபால் திருமணம்: 7ல் கேரள முறைப்படி நிச்சயதார்த்தம்!!!
Reviewed by The King
on
4:38 AM
Rating:
Reviewed by The King
on
4:38 AM
Rating:


No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .