Propellerads

சூர்யா, லிங்குசாமியெல்லாம் யாருப்பா? கட்டை போட்ட கரீனா !!

சூர்யா, லிங்குசாமியெல்லாம் யாருப்பா? கட்டை போட்ட கரீனா !!

இந்தி நட்சத்திரங்களுக்கு நாம்தான் இந்திய சினிமா என்ற திமிர் உண்டு. இந்தியா சினிமாவின் பிரதிநிதிகளாக தங்களை நினைத்துக் கொள்வதால் அவர்களின் தகுதிக்கு மீறிய வார்த்தைகள் அவ்வப்போது அவர்களின் திருவாய்களிலிருந்து வெளிப்படும். ஈகோவின் அழுக்குப் படிந்த அந்த வார்த்தைகளை அரபிக் கடலில் போட்டாலும் கழுவ இயலாது.நிற்க. இந்த கறாரான முன்னுரையை எழுதக் காரணம் கரீனா கபூர்.

லிங்குசாமி தனது அஞ்சான் படத்தில் ஒரு பாடலுக்கு கரீனா கபூரை ஆட வைக்கிறார் என்று சில தினங்கள் முன்பு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். அது குறித்து கரீனாவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்தான் இந்த செய்தியின் தலைப்பு. சூர்யா, லிங்குசாமியெல்லாம் யார் என எனக்கு தெரியாது.

சூர்யா நடித்த கஜினியை அமீர்கான் இந்தியில் ரீமேக் செய்தவேளை பேட்டிக்கு பேட்டி சூர்யா புராணத்தைதான் பாடினார். ரத்த சரித்திரம் எடுத்தவேளை சூர்யாவின் நடிப்பையும் அவரின் கண்களில் தெரியும் நெருப்பையும் அனைத்து பத்திரிகைகளிலும் வியந்து பேட்டியளித்தார் ராம் கோபால் வர்மா.


அமிதாப்பச்சனின் கண்களுடன் சூர்யாவின் கண்களை அவர் ஒப்பிட்டு பேசியது இந்திப் படவுலகில் பிரசித்தம். அஜய்தேவ் கானின் சிங்கம் சூர்யா நடித்த தமிழ்ப் படத்தின் ரீமேக் என்பதை பாலிவுட்டின் சந்து பொந்தும் அறியும். அதே அஜய்தேவ் கானுடன் சிங்கம் 2 வில் நடித்து வருவதும் இதே கரீனா கபூர்தான்.

இதற்கெல்லாம் மேலே ஒரே விளம்பரத்தின் இந்திப் பதிப்பில் கரீனாவும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடித்துள்ளனர். இத்தனைக்குப் பிறகும் சூர்யாவை யார் என தெரியாது என்று திருவாய் மலர்ந்தால் அது வேற வாயா இல்லை, —- வாயா?????


சூர்யா, லிங்குசாமியெல்லாம் யாருப்பா? கட்டை போட்ட கரீனா !! Reviewed by The King on 11:04 PM Rating: 5

No comments:

இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .

All Rights Reserved by NewJaffnaExpress © 2014 - 2015

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.