அஞ்சான் படப்பிடிப்பில் நடிகை சமந்தா ஆடைகள் திருட்டு
அஞ்சான் படப்பிடிப்பில் நடிகை சமந்தா ஆடைகள் திருட்டு
சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
அஞ்சான் படத்துக்காக பாடல் காட்சியொன்றை சமீபத்தில் படமாக்கினார். அங்குதான் இந்த ஆடை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
சூர்யாவுடன் குட்டை பாவாடை அணிந்து சமந்தா டூயட் நடனம் ஆடினார். அந்த காட்சியை எடுத்து முடித்ததும் சமந்தா கேர வேனுக்குள் சென்றார். அங்கு குட்டை பாவாடையை கழற்றி வைத்து விட்டு வேறு காட்சியில் நடிப்பதற்காக ஜீன்ஸ் பேன்ட் அணிந்தார். அந்த காட்சியை முடித்து விட்டு கேர வேனுக்கு திரும்பிய போது அங்கு அவர் கழற்றி வைத்து இருந்த குட்டை பாவாடையையும் மேலாடையையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியானார். படக்குழுவினரும் திகைத்தனர். யாரோ ஒருவர் நைசாக அந்த ஆடைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அஞ்சான் படப்பிடிப்பில் நடிகை சமந்தா ஆடைகள் திருட்டு
Reviewed by The King
on
8:22 PM
Rating:

No comments:
இதில் உள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் அல்லது குறை இருந்தால் அல்லது உண்மைக்கு மாறாக இருப்பின் கருத்து தெரிவிக்கவும் .